திருப்பத்தூர்,
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பாக 31 வது சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தூய நெஞ்சக் கல்லூரி வரை தலைக்கவச விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழாவில் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி போக்குவரத்து ஆய்வாளர் காளியப்பன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் பெண் காவலர்கள் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர்.