சென்னை,
சென்னை ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி சார்பாக புகைப்பட கலைஞர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கும் விழா சென்னை ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து புகைப்படக்கலைஞர்களை ஒருங்கிணைந்த தமிழ்நாடு வீடியோ மற்றும் போட்டோகிராபர் சங்கத்தின் அங்கீகரிக்க பட்ட மாவட்ட சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கும் அறிமுக விழா நடைபெற்றது.
எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழக தலைவர் பொறியாளர் ஏசிஎஸ் அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை செயலாளர் ரவிக்குமார் மற்றும் ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி நிர்வாகிகள் தனவேல், ஷாநவாஸ், ஜெயச்சந்திரன், பத்மநாபன், கீதாலட்சுமி, ரவிச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு மாநில புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மாதேஸ்வரன் பொதுச் செயலாளர் சிவக்குமார் பொருளாளர் ஜீவானந்தம் அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் மாநில நிர்வாகிகள் தமிழகத்தினுடைய அனைத்து மாவட்ட சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் தமிழகம் முழுவதும் உள்ள புகைப்படக்கலைஞர்களுக்கு ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டன.
இந்த மருத்துவ காப்பீடு அட்டை மூலம் உடல் நலம் சார்ந்த அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ சோதனை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து வகையான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இந்த அரிய வாய்ப்பினை வழங்கிய எம் ஜி ஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏசி சண்முகம் ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வா கிகளுக்கும் மாநில சங்கத் தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.