கடலூர், ஜன.7
ஆளும் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிக்கும் கணிசமான வெற்றி கிடைத்துள்ளது வருகின்ற நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும். கடலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் அதிமுக அரசு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அவர்களது தலைமையில் அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் அங்கீகாரம் கொடுத்தனர்.
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி கணிசமான வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றி அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் என்.ஜி.கே வாசன் தெரிவித்தார்.