சென்னை, மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்

சென்னை , ஜன.7-


        சென்னை மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆட்டோ மற்றும் சரக்கு வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மேடவாக்கத்தில் நடைப்பெற்றது.


           


மேடவாக்கம் அதிமுக ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் கண்ணபிரான் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைப் பெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் சரக்கு வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.


சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போக்குவரத்து உதவி ஆணையர் அன்வர் பாட்ஷா ஓட்டுநர்கள் பாதுகாப்பாக வாகனத் தை இயக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்டோ மற்றும் சரக்கு வாகன ஓட்டுனர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தியவாறு சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கியதை ஏந்தியவாறு சுமார் 3கிலோ மீட்டர் தூரம் மேடவாக்கம்தாம்பரம் பிரதான சாலையில் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.