கோத்தகிரியில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை

கோத்தகிரி, ஜன.7


    தமிழக மக்கள் அனைவரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை, 20கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2அடி நீளக்கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ,1000/ ரொக்கமாக வழங்க அரசானை பிறப்பிக்கப்பட்டது.


       


   நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 212323 அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். மேற்படி பொங்கல் பொருள் பரிசுத் தொகுப்பு வழங்க குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.1150.35 செலவு ஏற்படுகிறது. இதன்படி அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்க ரூ.24.42 கோடி ஏற்படுகிறது. இப்பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தினை மாநில அளவில் ஏற்கெனவே தமிழக முதல்வர் அவர்களால் பயனாளிகளுக்கு வழங்க திட்டத்தினை துவக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டந்தோரும் இத்திட்டம் 05.01.2019 அன்று துவங்கி வைக்கப்பட்டது. கோத்தகிரி கூட்டுறவுப்பண்டகத்தில் இத்திட்டம் துவங்கி வைக்கப்பட்டது.


   கோத்தகிரி கூட்டுறவு ப்பண்டகத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடை பற்ற விழாவில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் ஆ.ராமு சாந்திராமு) திட்டத்தினை துவங்கி வைத்து பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுப்பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். 


  இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆ.பழனிசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக உதகை மண்டல மேலாளர் எஸ்.ஜோதிபாசு, நீலகிரி மாவட்ட மத்திய கூட்டறவு வங்கியின் தலைவர் கப்பச்சி டி.வினோத், மாவட்ட வழங்கல் அலுவலர் வி.கணேஷ், துணைப்பதிவாளர் பொது விநியோகத்திட்டம் சி.ராதாகிருஷ்ணன் மற்றும் கோத்தகிரி கூட்டுறவுப்பண்டக மேலாண்மை இயக்குனர் சி.அய்யனார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


   மற்ற அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் 09.01.2020 முதல் 13.10.2020 வரை மேற்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்க தொகை ஆகியவை விநியோகிக்கப்பட உள்ளது எனவும், இதற்காக அனைத்து நியாயவிலைக்கடைகளும் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து செயல்படும் எனவும், தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பொருட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாலும், சுழற்சி முறையில் விநியோகம் செய்யப்பட்ட உள்ளதாலும், பொதுமக்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று பரிசுத் தொக்குப்பு மற்றும் பொங்கல் ரொக்கத் தொகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.