நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங்கின் கருனை மனு நிராகரிப்பு

நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங்கின் கருனை மனுவை நிராகரித்தார் குடியரசு தலைவர். 



 நாட்டையே உலுக்கின டெல்லி மாணவி நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி திகார் சிறையில் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


இதற்கிடையே, தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனு அனுப்பினார்.

 

முகேஷின் கருணை மனுவை  டெல்லி அரசு மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் உள்துறை அமைச்சகமும் கருணை மனுவை நிராகரித்து, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. அதில், முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்கும்படி ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

 

கோரிக்கையை ஏற்று குடியரசு தலைவர் முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் இந்நிலையில் 22ம் தேதி திட்டமிட்டபடி குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது.