நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நாளை வியாழன் அன்று காலை 10 மணிக்கு பழங்குடியினர் பண்பாட்டு மையம், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் நான்கு, குடும்ப அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகலுடன் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்களுடன் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். ஆதார் அட்டை எடுக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.