கடலூர் நகராட்சியின் அவலநிலை; சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கடலூர்,


கடலூர் நகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் மசூதி தெருவில் புதுப்பாளையம் பகுதி மக்களுக்கான ஈம சடங்கு செய்வதற்காக தனியாக ஈமச்சடங்கு கூடம் ஒன்று உள்ளது. அதே இடத்தில் குழந்தைகளின் அங்கன்வாடி மையம் உள்ளது.


ஈமச்சடங்கு செய்யும் இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கொண்டு அந்த இடத்தில் மாடுகளை கட்டி அசுத்தம் செய்து வைத்திருப்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஈம சடங்கு காரியம் செய்வதென்றால் அதன் அருகில் உள்ள அங்கன்வாடி மையம் வாசலில் வைத்து தான் செய்கிறார்கள்.


இதனால் அங்கன்வாடியில் குழந்தைகளை கொண்டு போய் விடுவதற்கு அப்பகுதி மக்கள் பயப்படுகிறார்கள். மேலும், அவ்விடத்தில் பொதுக்கழிப்பிடம் ஒன்றும் உள்ளது சுகாதாரமற்ற நிலையில் அப்பகுதி உள்ளதால் குழந்தைகளை அந்த அங்கன்வாடி மையத்தில் விடுவதற்கு குழந்தைகளின் பெற்றோர் அச்சப்படுகிறார்கள்.


கடலூர் நகராட்சியின் அவலநிலை அந்த இடத்தை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து மீட்டு சரி செய்து மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.