உலக ஆம்புலன்ஸ் தினத்தை முன்னிட்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவிப்பு

குடியாத்தம்,


     உலக ஆம்புலன்ஸ் தினத்தை முன்னிட்டு குடியாத்தத்தில் சர்வதேச உரிமைகள் கழகத்தின் வேலூர் வடக்கு மாவட்டம் சார்பில் குடியாத்தம் அரசு மருத்துவமனை அருகே உள்ள ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.


         


    நிகழ்ச்சிக்கு சர்வதேச உரிமைகள் கழகத்தின் வேலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். மாநில கல்வி அணி இணைச் செயலாளர் சரவணா, வேலூர் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் காமராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


     சர்வதேச உரிமைகள் கழகத்தின் துணைத் தலைவர் யுவராஜ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க மண்டல செயலாளர் மகேஷ், செல்வகுமார், சதிஷ், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி மரியாதை செய்தார்.


     இதில் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், வேலூர் வடக்கு மாவட்ட அமைப்பாளர் இம்ரான், ஒருங்கிணைப்பாளர் அசோகன், இணைச் செயலாளர் ஏழுமலை, குடியாத்தம் நகர செயலாளர் தினேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் சர்வதேச உரிமைகள் கழகத்தின் மாநில மாணவரணி துணைச் செயலாளர் ராஜேஷ் நன்றி தெரிவித்தார்.


     பேர்ணாம்பட்டில் வேலூர் மாவட்ட துணை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் பேர்ணாம்பட் அரசு மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் செவிலியர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன் பேர்ணாம்பட் ஒன்றிய துணை செயலாளர் கணேசன் மற்றும் பலர் இருந்தனர்.