அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் இளைஞர் பேரவை தொடக்கம்

திருப்பத்தூர்,


      திருப்பத்தூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பில் அகில இந்தி தாழ்த்தப்பட்டோர் இளைஞர் பேரவை தொடங்கப்பட்டு உள்ளது.


         


     மக்களுக்கு பொருளாதார மேம்பாடு அடைவதற்கும், கல்வியின் தரம் உயரவும், தொழில் தொடங்கவும் நலத்திட்டங்களை முழுமையாக பயனடையும் வகையில் அகில இந்திய தாழ்த்ப்பட்டோர் இளைஞர் பேரவை இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்டு மாநில அளவிலும் மற்றம் கிராம நகர்புறங்களிலும் கிளைகளை தொடங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


     திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், நாட்ராம்பள்ளி, ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் ஒன்றியங்களில் 50புதிய கிளைகள் தொடங்கப்பட்டு உள்ளனர். இந்த கிளைகள் தொடங்குவதற்கு வேலூர் மாவட்ட பொது செயலாளர் கே.கே. ராஜா மற்றும் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் சிவகுமார் ஆகியவர்கள் துவக்கி வருகின்றனர்.


       2020 மார்ச் மாதத்திற்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி ஒன்றிய பகுதிகளில் சுமார் 300 கிளைகள் தொடங்க இருப்பதாக தெரிவித்தனர். இந்த பேரவையின் மாநில தலைவர் அய்யாசாமி, மாநில பொது செயலாளர் குப்புசாமி, பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் வேகமாக செயல்பட்டு வருகின்றனர்.