திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சோலூர் கிராமத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் தமிழக அரசு மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் 1 கோடி 55 லட்சம் மதிப்பீட்டில் நரிக்குறவர்களுக்கு வீடு கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது.
இதில், தமிழக அரசு சார்பில் 78 லட்சம் ரூபாய் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 37 வீடுகளை தமிழக அரசு கட்டி வருகின்றனர்.
இந்த பணியை பார்வையிடுவதற்காக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடரி மேலாண்மை துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ம.ப.சிவன் அருள் ஆகியோர் கட்டிடப் பணிகளை பார்வையிட்டு பின்னர் நரிக்குறவர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த பின்னர் அங்கு நடைபெறும் நரிக்குறவர் மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் கலந்துரையாடி அவர்களுடைய கல்வி தரத்தை ஆய்வு மேற்கொண்டார்.