புதுடெல்லி,
டெல்லியில் குடியரிமை சட்ட திருத்ததை எதிர்த்து கடந்த 3 நாட்களாய் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் போராடுபவர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதி கொண்டனர். ஒருவர் மேல் ஒருவர் கற்களை வீசி தாக்கினர். இவ்வன்முறையில் இதுவரை 20 பேர் பலியாகினர் மேலும்150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வன்முறையை கட்டுப்படுத்துவதில் போலீசாருக்கு மிகுந்த சிக்கல் ஏற்பட்டதால் தற்போது வரை வன்முறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
வன்முறையை கட்டுப்படுத்த டெல்லி போலீசார் தவறியது தான் வன்முறைக்கான முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.
மேலும் இதனை பற்றி விசாரித்ததில் டெல்லியில் பணிபுரியும் பெரும்பாலான துணை கமிஷனர்களுக்கு வன்முறையை கட்டுப்படுத்துவது குறித்து அனுபவம் இல்லை என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதுமட்டுமின்றி தற்போதைய போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்கும், தனது பணி நாளில் பெரும்பாலான நாட்கள் குற்றப்பிரிவு, விஜிலென்ஸ் அல்லது நிர்வாக பணிகளில் தான் இருந்துள்ளார். பதற்றத்திற்கு உள்ளான பகுதிகளில் உள்ள சமூக தலைவர்கள், மத தலைவர்கள் மத்தியில் போதிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி தகவல்களை பெறுவதற்கு போலீசார் தவறிவிட்டனர்.
மேலும் ஜேஎன்யு மாணவர்கள் மீது முகமூடி அணிந்த குண்டர்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்தின் போதும் போலீசார் கடமை தவறியதாக டெல்லி மக்கள் தெரிவித்தனர்.