23 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் தஞ்சை கோவில் கும்பாபிஷேகம்

தஞ்சாவூர்-  தஞ்சை பெரிய கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் தஞ்சாவூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலின் கும்பாபிஷேக விழா 23 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது.


யாகசாலை பூஜையை காண 1-ம் தேதி முதல் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறதுகும்பாபிஷேக விழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வர துவங்கி உள்ளதால் தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது.


இன்று அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், நாடி சந்தானம், ஸ்பர்ஸ்ஹூதி ஆகியவை நடைபெற்றது. காலை 7.00 மணிக்கு மஹா பூர்ணாஹூதிதீபாராதனை, யாத்ரா தானம், கரஹப்பிரிதி, 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் நடைபெற்றது.


இதில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.அமல்ராஜ் மற்றும் டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்கள் பங்கேற்றனர். பின்னர், பஸ் நிலையங்கள், ரயிலடி, திலகர் திடல் ஆகிய பகுதிகளை நேரில் பார்வை யிட்ட டி.ஜி.பி. திரிபாதி, தஞ்சை பெரிய கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.


கும்பாபிஷேக விழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். இதனால் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்காக தேவையான அடிப்படை வசதிகள் செய்யும் பணி


கடந்த சில நாட்களாக தொடாந்து நடைபெற தொடர்ந்து நடைபெற்று வந்தது. கும்பாபிஷேகத்திற்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக 21 இடங்களில் வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.


மேலும், குடிநீர் வசதி, கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன . கும்பாபிஷேக விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தமிழக டி. ஜி. பி. திரிபாதி நிருபர்களிடம் கூறியதாவது: கோவிலுக்கு வரக்கூடிய மக்களிடம் எளிமையான அணுகு முறையை கடைபிடிக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கும்பாபிஷேக தினத்தன்று மட்டும் ஐந்து லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கிறோம் . அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க தயார் நிலையில் உள்ளோம். கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் 5,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 15 பிரிவுகளாக போலீசார் பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.