குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி பேசுவதற்கு ரஜினிக்கு தகுதியில்லை. அவர் நடிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் அதிரடியாக கருத்து தெரிவித்தார்.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி குடியுரிமை சட்டத்தைப் பற்றி இஸ்லாமியர்கள் கவலைப்பட வேண்டாம் என கருத்து தெரிவித்தார்.
இக்கருத்தினை விமர்சித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பேசுகையில், குடியுரிமைத் திருத்த சட்டத்தை பற்றி பேசுவதற்கு ரஜினிக்கு தகுதியில்லை. அவர் ஒன்றும் சட்டப்பேரவை உறுப்பினரோ, அரசியல் கட்சியிட் தலைவரோ அல்ல. அவர் நடிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தா. பாண்டியன் அதிரடியாக கருத்து தெரிவித்தார்.
இக்கருத்தினை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஆதரித்தும், எதிர்த்தும் வருகின்றனர்.