மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்திற்கான கால நீட்டிப்பு

வேலூர்,


    தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான இலடி, இளம், அடி, என்னடி மற்றும் மத்திய பல்கலைக்க கங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியர்களில் கடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமம் உள்ள மாணவ / மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 


தற்போது, கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கு 28.02.2020 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


தகுதிகள்:


    1. தமிழ்நாட்டைச் சார்ந்த பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/ மாணவியர்கள்


    2. பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான இலடி, ஐஐஎம், என் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயில வேண்டும்.


    3. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேற்படி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம் குறித்து தகுதி மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அதி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.