சென்னை,
கடந்த ஆண்டு அரசு மருத்துவர்கள் சம்பள உயர்வு, காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த போராட்டத்தை ஈடுபட்டனர். அப்போது சுகாதார துறை அமைச்சரும், செயலருடனும் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் போராட்டத்தை கைவிட்டனர்.
சில மருத்துவர்களை கண்டிக்கும் விதமாக பணியிடமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து மருத்துவர் பாலசுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை நீதிமன்றம் விசாரித்து பணியிடமாற்றத்தை ரத்து செய்து, பணியில் உள்ள அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை. நீண்ட நாளாக நிலுவையில் உள்ள மருத்துவரின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தது.