ஈரோடு மாவட்டத்தில் கொள் முதல் திட்டம்

ஈரோடு,


   ஈரோடு மாவட்டத்தில் காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட துவரைப்பயறு ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் 2019-2020 ஆம் ஆண்டு காரீப் (Kharif) பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட துவரைப்பயறு அந்தியூர் மற்றும் பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படவுள்ளது.



இக்கொள் முதல் பணி 03.02.2020 முதல் 14.03.2020 முடிய செய்யப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள துவரையானது நிர்ணயிக்கப்பட்டுள்ள சராசரி தரத்தின்படி இருத்தல் வேண்டும். ஒரு கிலோ துவரை ரூ.58 க்கு கொள்முதல் செய்யப்படவுள்ளது.


கொள்முதல் செய்யப்படும் துவரைக்கான தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்தது வரை பயிரினை ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், சிட்டா அடங்கல் போன்ற ஆவணங்களுடன் அந்தியூர் மற்றும் பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரலாம்.


இந்த கொள்முதல் திட்டம் 03.02.2020 முதல் 14.03.2020 முடிய செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள துவரை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் கேட்டு கொண்டுள்ளார்.