மகாசிவராத்திரி; உலக யோகி தினம்


சென்னை,


    இன்று இந்துக்கள் கொண்டாடும் இரண்டாவது மிகவும் பிரபலமான பண்டிகை மகாசிவராத்திரி.


இதனையொட்டி, இவ்வாண்டிலிருந்து மகாசிவராத்திரியை பிரச்சத்தப்படுத்தும் விதமாக யோகிகள் தினம் கொண்டாடப்பட இருக்கிறது.


இதனைப்பற்றி, சென்னை, தி-நகரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் யோகி நந்திஜி செய்தியாளர்களுக்கு பேசுகையில், வருடத்திற்கு ஒரு முறை உலகெங்கிலும் வாழும் 1.08 பில்லியன் இந்துக்கள் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றான மகா சிவராத்திரியை கொண்டாடுகிறார்கள்.


இது வானியல் மற்றும் ஜோதிட முக்கியத்துவத்தின் சந்திர நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டது. இந்நாளில் சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்படுகிறது.


மேலும் அவர் கூறுகையில், மகாசிவராத்திரி யோகியின் இரவாகவும் மில்லியன் கணக்கானவர்கள் மனதிலும், உடலிலும் வரம்பற்ற பரந்த ஆவியின் நிலைக்கு மாற்றும் நேரமாகக் கருதப்படுகிறது. "ஒவ்வொரு மகாசிவராத்திரியும் உங்கள் உடலின் ஒவ்வொரு துகள்களையும் கொண்டு முக்தி அடைய வேண்டும். முக்தி அடைவது என்பது உண்மை, அழகு, அமைதி மற்றும் நற்பண்புகளை நோக்கி நகர்வதாகும்.


இனி வருகின்ற ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்தியன்று யோகிகள் தினம் அனுசரிக்கப் போவதாக தெரிவித்தார்.