திருச்சி-
திருச்சி மாவட்டத்தில், உள்ள திருப்பைஞ்சீலி கிராமத்தில் கடந்த 26ம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் 2018 -19ம் நிதியாண்டில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட வரவு செலவு விவரங்களை, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட ஆவணங்களை கொண்டு திருச்சி நாம் தமிழர் நிர்வாகி கண்ணன் சபையில் கேள்வி எழுப்பினார்.
கிராம மக்களின் பிரச்ச னைகளையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று சரிசெய்ய முயன்றுள்ளார். கிராம சபையில் கேள்வி எழுப்பியதாலும், அக்கிரமத்தில் நடைபெறும் தவறு களை தட்டிக் கேட்பதாலும், அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ள து. இருப்பினும் கண்ணன் மிரட்டலுக்கு அஞ்சாததால். மர்ம நபர் இருவர் கண்ணனிடம் மதுபானக்கடைக்கு வழி கேட்பது போல் அவரை தனியே அழைத்து அறுவாலால் அவரின் பின் தலையிலும், தோல்களிலும் வெட்டினார்கள்.
அதில், ஒருவன் இனி கிராம சபையில் கேள்வி கேட்பாயா என்று மிரட்டியவாறு தாக்கியுள்ளான். இத்தகவலை அறிந்த நாம் தமிழர் கட்சியனர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, கண்ணன் மருத்துவமனையில் காவல்துறையினரின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.