காரியாபட்டி,
காரியாபட்டி பஸ் நிலையத்தில் கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார் கலெக்டர். உலக அளவில் கொரானா வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவிவருகிறது.
இதனை தடுக்கும் வகையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பஸ் நிலையத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் வைக்கப்பட்ட சிறப்பு முகாமினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்.
இதில் பள்ளி மாணவ,மாணவியர்கள் கைகழுவும் முறை குறித்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பொதுமக்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் சுரேஷ், காரியாபட்டி வட்டாட்சியர் செந்தில்குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிக்குமார், காவல் ஆய்வாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.