செய்தி துளிகள் - கரூர்

   


கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு, 144 தடை உத்தரவை கடைபிடித்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி வகைகள் பொதுமக்கள் தகுந்த இடைவெளியில் நின்று வாங்குவதற்காக கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் த. அன்பழகன், நகராட்சி ஆணையர் சுதா உள்ளார்.