திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மீறி வெளியூருக்கு செல்லும் வாகனங்களை தணிக்கை செய்ததில் அனைவரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தாராபுரம் துணை கண்காணிப்பாளர் ஜெயராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தாராபுரத்தில் சுற்றுவட்ட பாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வெறிச்டே சாடிய நிலையில் உள்ளன.
இந்நிலையில் பைபாஸ் சாலையில் அதிக அளவில் வாகனங்கள் சென்று கொண்டு இருந்ததை அறிந்த தாராபுரம் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாராபுரம் வட்டாட்சியர், குண்டடம் காவல் ஆய்வாளர், மூலனூர் காவல் ஆய்வாளர் போக்கு வரத்து ஆய்வாளர் போன்ற குழுவினருடன் 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினருடன் தாராபுரம் நகர்ப்பகுதிகளில் ரோந்து சென்றனர்.
மேலும் புறநகர் பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இந்நிலையில் அனைத்து வாகனங்களையும் தணிக்கை செய்து அனைவரையும் வரிசையாக தனித்தனியே நிற்கச் செய்து அவர்களுக்கு 144 தடை உத்தரவையும், கொரோனா வைரஸை பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார்.
தமிழக அரசால் அறிவிக் கப்பட்ட 144 தடை உத்தர வை மீறி செல்பவர்களுக்கு அனைவரின் வாகனங்க ளையும் பறிமுதல் செய்யப் படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.