கடலூர்,
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் சிஏஏ வுக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் தொடர் தர்ணா போராட்டம் கடந்த மாதம் 21ந் தேதி தொடங்கி 27 நாட்கள் தர்ணா போராட்டம் நடைப்பெற்று வந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் எதிரொலியால் தற்காலிகமாக ஒத்திவைததனர்மேலும் வருகிற 31ம் தேதிக்குள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் 1ந் தேதி இதை விட பன்மடங்கு கூட்டம் கூட்டி போராட்டம் நடைபெறும் என்று போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.