பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் புறநகர் பகுதிகளில் 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்களை தடுக்கும் பொருட்டு டிஎஸ்பி சங்கர் தலைமையில் போலீசார்கள் மணிநகர், ஒட்டப்பாலம், ஐந்து முனை பகுதி, பஸ் நிலையம், பஜார் பகுதி கிருஷ்ணா தியேட்டர் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடி அமைத்துதீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வேளையில் ஐந்து மு னை பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலான போலிசார்களிடன் ஊரடங்கு உத்தரவு நடைபெற்று கொண்டிருக்கிற வேளையில் பெண்கள் மருந்தகங்கள் மற்றும் காய்கறிகள் வாங்க ஆள் நடமாட்டம் இல்லாத வெறிச்சோடிய சாலையில் அடிக்கடி வெளியே வந்தனர். அந்த பெண்களை போக்குவரத்து ஆய்வாளர் அறிவழகன் நிறுத்தி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அடிக்கடி வெளியே உலா வருவதால் திருடர்கள் இந்த சமயத்தை சாதகமாக்கி கழுத்தில் இருக்கின்ற தங்க சங்கிலியை பறிக்க நேரிடும்.
ஆகையால் அத்தியாவசிய பொருட்களை வாங்கி விட்டு பாதுகாப்பாக செல்ல வேண்டும். கழுத்தை சுற்றி சேலையை மறைத்து கொள் ள வேண்டும். இனிமேல் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.