தேவகோட்டையில் காய்கறிகளின் விலை உயர்வு கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம்

தேவகோட்டை,


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பதாக பொதுமக்கள் புகார். தேவ கோட்டை தாலுகா அதிக கிராமங்கள் நிறைந்த பகுதியாகும்.


சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் அன்றாட பொருள்கள் வாங்க தேவகோட்டைக்கு தான் வரவேண்டும். தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


மருந்து கடை, காய்கறிக் கடை, பலசரக்கு கடை, பால் விற்பனை மையம், ஒட்டல்களில் உணவுகளை பொட்டலமாக மட்டுமே மடித்து தர வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் ஊரங்கு உத்தரவை கடைபிடிக்க அரசு உத்தரவிட்டது. தேவகோட்டையில் தினசரி மார்கட் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டது கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் வருவாய்த் துறையினர், நகராட்சி ஆணையாளர், காவல் துறையினர் சேர்ந்து கூட்டம் கூடுவதை தடுக்கும் பொருட்டு சந்தையை ராம்நகர் அழகப்பா பூங்கா, நகர சிவன் கோயில், சிலம் பணி ஊரணி ஆகிய மூன்று இடங்களில் தற்போது காய் கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுகளில் 40 ரூபாய்க்கு விற்ற கத்தரிக்காய் 80க்கும், 30 ரூபாய்க்கு விற்ற தக்காளி 96க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதனால் அன்றாட கூலி வேலை செய்பவர்கள் தற்போது கூலி வேலைக்கு கூட போக முடியாத சூழ்நிலையில் காய்கறி விலை உயர்வால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளா கியுள்ளனர். கொரோனா நோய் தொற்று வராமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்திக்காக காய்கறிகளை உண்ணவேண்டும் என்கிறார்கள்.


காய்கறிகளின் விலை உயர்வால் எப்படி காய்க றிகள் வாங்க முடியும். இந்த நிலை நீடித்தாள் சுடு கஞ்சியும், ஊறுகாய் சாப்பிடும் நிலைதான் வரும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் தக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இருந்தும் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் மிகுந்த மன வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


கொரோனா தொற்று நோய் வந்து சாவதற்கு முன்னால் விலைவாசி உயர்வால் அன்றாட கூலிகளாகிய நாங்கள் பட்டினி கிடந்து சாவு தான் இந்த அரசாங்கம் பார்க்க போகிறது என்று மனகுமுறலை கொட்டி செல்கின்றனர்.