அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு தீர்ப்பு

கடந்த 2018-ம் ஆண்டு சென்னை, அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி கூட்டு பாலியல் செய்யப்பட்ட வழக்கில் அடுக்குமாடியில் பணிபுரியும் ஊழியர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.



2018ம் ஆண்டில், இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் 17 குற்றவாளிகளையும் குண்டார் சட்டத்தில் தண்டிக்க உத்தரவிட்டது. 


இதனைத் தொடர்ந்து, அவர்கள் 17 பேர் மீதும் போடப்பட்ட குண்டார் சட்டம் ரத்து செய்யப்பட்டது. பின்னர்  2019-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க தொடங்கியது. இதற்கிடையே பல முறை குற்றவாளிகள் ஜாமின் வேண்டி மனு அளித்தும், நீதிமன்றம் மனுவை இறுதிவரை நிராகரித்தது. மேலும் 17 குற்றவாளிகளையும் சிறையில் வைத்தே விசாரணை மேற்கொண்டது காவல் துறை.


17 குற்றாவளிகளில் ஒருவரான பாபு (லிப்ட் ஆப்ரேட்டர்) உடல் நலக் குறைவால் சிறையிலே காலமானார். 


இவ்வழக்கு விசாரணைகள் முடிவடைந்ந நிலையில் பிப் 01ம் தேதி, நீதிபதி மஞ்சுளா தலைமையில் குற்றசாட்டுப்பட்ட 17 பேர்களில் ஒருவரான தோட்டக்கார குணசேகரன்(55) மீதான குற்றம் நிறுபிக்கப்படாததால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டது. மேலும் கைது செய்யப்பட்ட 15 பேருக்கான தீர்ப்பு பிப் 3ம் தேதி வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. 


இந்நிலையில் பிப்- 3ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா தலைமையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குறிப்பிட்டதாவது;-


    A1) ரவிகுமார் (56) சாகும்வரை ஆயுள்


    A2) சுரேஷ்(32) சாகும் வரை ஆயுள்


    A3) ராஜசேகர்(48) ஆயுள்


    A4) எரால்பிராஸ்(58) 7ஆண்டு


    A5) அபிஷேக் (28) சாகும் வரை ஆயுள்


    A6) சுகுமாரன் (60)5 ஆண்டு


    A7) முருகேசன்(54) 5 ஆண்டு


    A8) பரமசிவம் (60) 5 ஆண்டு


    A9) ஜெய்கணேஷ் (23) 5 ஆண்டு


    A10) பாபு(36) இறந்துவிட்டார்


    A11) பழனி(40) சாகும் வரை ஆயுள்


    A12) தீனதயாளன்(50) 5 ஆண்டு


    A13) ராஜா (32) 5 ஆண்டு


    A14) சூர்யா(23) 5 ஆண்டு


    A15) குணசேகரன்(55) விடுதலை


    A16) ஜெயராமன்(26) 5 ஆண்டு


     A17) உமாபதி(42) 5 ஆண்டு


என 15 குற்றவாளிகளில் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு  ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 9 பேருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை விதித்து அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.