நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை உறுதியாகுமா?

புதுடெல்லி, 


 டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.


இந்த வழக்கில் முகேஷ், அக்சய், வினய், பவன்குமார் குப்தா ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


இதில் முகேஷ், அக்சய், வினய் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மற்றும் மறு சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. மூவரின் கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். 



 இதனைத் தொடர்ந்து நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு தண்டனை விதித்திருந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா (25) தனக்கு விதித்த மரண தண்டனையை வாழ்நாள் தண்டனையாக மாற்ற வேண்டுமென மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். 


இம்மனு நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவில் தண்டனையை குறைப்பதற்கான காரணங்கள் இல்லை என்பதால் தள்ளுபடி செய்யப்பட்டது.


மேலும், பவன் குப்தாவின் கருணை மனு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.