வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், முக்கியமாக தமிழ் எழுத்துகள் முதன்மையாகவும் மற்ற மொழிகள் எல்லாம் இரண்டாம் இடத்திலும் இருக்க வேண்டும். இந்த உத்தரவினை பின்பற்றாதவர்கள் சட்டத்தின் படி தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளது. இந்த உத்தரவு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் மொழி பயிலும் முறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வரும் நிலையில், இந்த உத்தரவு தமிழ் மொழின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துணர்த்தும் வழியாக அமைந்துள்ளது என்று கூறினால் மிகையாகாது. தமிழகத்தில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே வைத்துள்ளன. தமிழ் மொழியில் பலகைகள் வைக்க வேண்டும் என்பது 1987ஆம் ஆண்டு தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட ஆணை. ஆனால், இதனை நடைமுறைப்படுத்தாமல் விட்டதால் தற்போது திரும்பவும், இது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எந்த மாநிலத்திற்கும் இல்லாது சிறப்பு நம் தமிழ் நாட்டிற்கு உண்டு. கண்டன் சங்கரலிங்கனார் தமிழ் மொழியின் மேல் வைத்த பற்றின் காரணமாக 75 நாள் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை தியாகம் செய்து மெட்ராஸ் எனப்பட்ட மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றத்திற்கான காரணத்திற்கு வித்தாக அமைந்தார். அவ்வளவு சிறப்பு மிக்க தமிழ் மொழிக்கு இனி வணிகர்கள் முன்னுரிமை அளித்து சட்டத்தை மதிப்போம்.
தமிழுக்கு மரியாதை