புனே,
இந்தியாவில் கொரோனா வைரசால் 1,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
இந்த சூழலில், மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மும்பையை விட்டு வெளியேற கூடாது. என தெரிவித்தார் அவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் புகலிடம் ஆகியவற்றுக்கு போதிய ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம்.
மராட்டியத்தில் இருந்து செல்ல வேண்டிய தேவை இல்லை. அவர்கள் இங்கேயே தங்க வேண்டும் என கூறினார்.
நாளை ஏப்ரல் 1ந்தேதி, முட்டாள்கள் தினம். இந்த சூழ்நிலையில், வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என ஒவ்வொருவரிடமும் நான் கேட்டு கொள்கிறேன். வதந்தி பரப்பும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.