வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சாதிக்பாஷா (வயது 46) என்பவர் 08.04.2020 அன்று காலமாகிவிட்டார். அதனைத் தொடர்ந்து அதே போல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ( 14.04.2020 ) காலை கடைசி சி.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். ஏற்கனவே இதுபோன்று சாதிக்பாஷா மற்றும் பல்கீஸ் ஆகியோருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களிடமும், மருத்துவர்களிடமும் நோய் தொற்று குறித்து விசாரிப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவினர் (வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் மருத்துவதுறை) விசாரணைக்கு வரும் போது முழு ஒத்துழைப்பும் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அவர்களது மருத்துவமனைகள் மூடப்பட்டு வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் தொண்டை வலி போன்றவை இருந்தால் (SARI-Severe Acute Respira- tory illness UTMS | ILI- Influ- enza Like Illness) தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் அரசு மருத்துவமனைகளை மட்டுமே அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மீறி சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள்உடனடியாக அந்த நபரை அரசு மருத்துவமனைகளுக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அத்தகைய நபர்களை கடைசி நேரத்தில் சி.எம்.சி மருத்துவமனைக்கோ அல்லது அரசு மருத்துவம் னைகளுக்கோ அனுப்புவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கோவிட் 19 வைரஸ் தொற்றினால் சி.எம்.சி மருத்துவமனையில் உயிரிழந்த சாதிக்பாஷாவின் நேர்விலும் தற்போது அதே போன்று தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது கோவிட்19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பல்கீஸ் என்பவரது நேர்விலும் சிகிச்சை அளித்த அனைத்து தனியார் மருத்துவம னைகளின் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள், உடன் வந்த உறவினர்கள், உடனிருந்த பிற நோயாளிகள் அனைவ ரும் தங்களை அரசு மருத்துவமனைகளில் உடனடியாக காலதாமதம் செய்யாமல் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும், வேலூர் நகரப்பகுதிகளில் கோவிட் 19 தொற்று கண்டறியப்பட்ட 16நபர்கள் வசித்து வந்த ஆர் . என்.பாளையம், முள்ளிப்பாளையம், கஸ்பா, சைதாப்பேட்டை, கொண வட்டம், சின்ன அல்லாபுரம், ஹாஜிபுரா (கருகம்பத்தூர்) போன்ற பகுதிகளில் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நபர்கள் வசித்து வந்த தெருக்களில் உள்ளவர்கள் அனை வருக்கும் கீழ்கண்டவாறு தினசரி சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி சிறப்பு முகாம்கள் இந்த மாதம் இறுதி வரை தொடர்ந்து நடை பெறும். எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு SARI, ILI போன்ற காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக இந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இந்த சோதனையில் மாவட்ட நிர்வாகத்திற்கு உதவிபு ய தொடர்புடைய ஜமாத்தாரர்கள் துணைபுரியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.