கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இந்திய அரசுக்கு சொந்த மான இந்தியன் மணல் ஆலை (Indian Rare Earths Itd-IRE) என்ற மிகப்பெரிய நிறுவனம் சுமார் பத்தாயிரம் தொழிளார்களுடன் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.
இந்த கொரோனா பாதிப்பு நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டமும் (Red Alert) தொற்று பரவல் பட்டியலில் உள்ள நிலையில் மத்திய அரசே இப்படிப்பட்ட சமூக விலகலை கடைபிடிக்கமால் ஊரடங்கு சட்டத்தை அமல்ப டுத்தி விட்டு மத்திய அரசின் கம்பெனியை திறந்து வைத்து மக்களின் உயிரில் பொறுப்பில்லாமல் செயல் பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் மருத்துவத்திற்கோ, தனி மனித தேவைக்கான எதையும் இவர்கள் தயாரிக் காத பட்சத்தில் ஏன் மத்தியஅரசு இவ்வளவு அலட்சியம் காட்டுகிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது. தொழிலாளார்கள் அனைவ ரும் கட்டாயமாக பணிக்கு வரவேண்டும் என்ற நிர்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பல ஊழியர்க ளுக்கு நோய் பயம், உயிர் பயம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே மத்திய அரசு இந்த நிறுவனத்தை தற்காலிகமாக மூடிவிட்டு தொழில ாளர்களின் நலனில் அக்கறை செலுத்த முன்வருமா.?