குமரி மாவட்டத்தில் தனிநபர் ஜெப அறையை நோயாளிகளுக்கு திறக்க கோரிக்கை

குமரி, 


குமரி மாவட்டம் ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரியில் Chappel ஒன்று ஆங்கிலேயர் ஆட்சிகால முதல் செயல்பாட்டில் இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் தொழு நோயாளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவமனை. ஆங்கிலேயர்களால் மாவட்ட நோயாளிகள் வந்து ஜெபம் செய்வதற்காக Chappel ஓன்று கட்டப்பட்டும் நிர்வகித்தும் இருந்து நிலையில், நாடு சுதந்திரம் பெற்ற பின்பு அரசுக்கு கைமாற்றப்பட்டு தொழுநோயாளி மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது.


மேலும் கோட்டாறில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனை இடம் பற்றாக்குறையால் தற்போதுள்ள ஆசாரி பள்ளத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டது. இது சுமார் 100 ஏக்கர்க்கும் மேற்பட்ட நிலப்பரப்புள்ள இது சுமார் 100 ஏக்கர்க்கும் மேற்பட்ட நிலப்பரப்புள்ள இடம் கொண்டது ஆகும்.


இந்த இடத்தில் வழக்கம்போல நோயாளிகள் வந்து ஜெபம் செய்து வந்தனர். இந்நிலையில் சில மதவாதிகள் கொரோனா வைரஸ் நிலவி வரும் சூழ்நிலை என்றும் கூட பாராமல், 144 ஊரடங்கு உத்தரவை மீறி அங்கு சென்று பிரச்சினைகள் செய்ததாக தெரிகிறது.


மேலும் மதவாதிகள் Chappelக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுக்கள் கொடுத்த தடை செய்யப்பட்டுள்ளதாக 12-04-2020 நாளிதழில் வந்த செய்தியை அறிந்து பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், மனக்கவலையும் அடைய வைத்துள்ளது.


இதுமட்டுமல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் 4 இடங்களில் மாற்று மத வழிபாட்டு தலங்கள் உருவாக்கப்பட்டு கொடைகள், திருவிழாக்கள், ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. ஒலிபெருக்கி வைத்து மருத்துவமனை வளாகத்திலேயே ஒளிமாசு ஏற்படுத்தியும் வருகிறார்கள். சேவா மையங்கள் என்ற போர்வையில் அநாகரீக செயல்கள் நடைபெறுவதாக தெரிகிறது.


பல நூற்றாண்டுகளாக செயல்பட்டு வந்த Chappelலின் முறைகளை நிறுத்த எந்த மதவாதிகளுக்கும், எந்த உரிமையையும் அரசு அனுமதிக்க கூடாது என்பதை தெரியப்படுத்தி கொள்கிறோம். ஆகவே, தற்போது பூட்டப்பட்ட Chappel-ஐ மீண்டும் திறந்து வைத்து அமைதியாக தனிநபர் ஜெபம் செய்ய நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அனுமதிக்கும் படி ஜனநாயக கிறிஸ்தவ பேரவை சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறது.