கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்திரவின் போது தமிழகமெங்கும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அனைத்து அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், அனைவரும் வருகை புரிந்து சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அலுவலக பணியை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
ஜல் ஜீவன் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பயனாளிகளுக்கு இரண்டு நாள் ஊதியம் ஏற்றிட இரவு பணி மற்றும் அதிகாலை 2-30 மணியளவில் பணியாளர்கள் வருகை புரிய வயர்லெஸ் செய்தி மூலம் தகவல் தரப்பட்டுள்ளது ஜல்ஜிவன் படிவம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் அலுவலர்கள் யாரும் இரவு தங்களுடைய இல்லத்திற்கு திரும்பக் கூடாது என உத்தரவும் போடப்பட்டுள்ளது.
மதியம் 1 மணிக்குமேல் எந்த கடைகளும் கிடையாது, இரவு உணவு கிடையாது, மாலை நேரம் தேநீர் கிடையாது, சமூக விலகல் நேரத்தில் எந்த வீட்டிலிருந்தும் உணவுப்பொருட்களை கொண்டு வர இயலாது, ஆனால் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களை மனிதனாகக் கூட மதிக்காத மாநில, மாவட்ட நிர்வாகம் காலச் சூழ்நிலை தெரியாமல் பணி நெருக்கடி கொடுத்து மனஉளச்சலுக்குள்ளாக்குகி வருகின்றதாக குற்றம்சாட்டுகின்றனர் அலுவலக பணியாளர்கள்.
மனிதாபிமானம் மறந்த மனித உரு தரித்த மிருகங்களிடம் சிக்கித் தவிக்கிறதாகவும் அடுக்குகின்றனர். ஒட்டு மொத்த ஊரக வளர்ச்சித்துறையை சார்ந்தவர்கள்...! இந்த அவல நிலை மாறுமா... சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா...? மனிதம் மலர வேண்டும் என்பதே பணியாளர்களின் எதிர்பார்ப்பு.