விழிப்புடன் செயல்படுவோம்!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,615ஆக அதிகரித்துள்ளது. 54 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.


இதுவரை நாடு முழுவதும் 2302 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாடு கொரோனா பாதித்த மாநிலத்தில் 5ம் இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் நோயாளிகளை குணப்படுத்துவதற்கு மருத்துவகள்தங்கள் இன் உயிரையும் பொருட்படுத்தாமல் பணி செய்து வருகின்றனர். இதனால் இதுவரை தமிழகத்தில் மட்டும் 12 மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.



நேற்று முன்தினம் சென்னையில் பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவரின் சடலத்தை புதைப்பதற்கு அண்ணாநகரில் உள்ள காந்திநகர் வேலங்காடு சுடுகாட்டுக்கு கொண்டு வந்தனர். இந்த தகவலை அறிந்த சத்திய நகர் குடியிருப்பு வாசிகள் சடலத்தை இந்த மயான பூமியில் புதைக்க கூடாது என தகராறில் ஈடுபட்டனர். அவசர ஊர்தி ஓட்டுநர்கள் மக்களுக்கு எடுத்து கூறியும் அவர்கள் புரிந்து கொள்ளாமல் அவசர ஊர்தி ஓட்டுநர்களை அடித்து காயப்படுத்தினர். இறுதியில் காவல் துறையினருடைய உதவியுடன் மருத்துவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் மக்களின் இயலாமையை காண்பிக்கின்றது. ஊரடங்கு அமலாகி 27 நாட்கள் முடிந்து இருந்தாலும் மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய தெளிவு என்பது கடுகு அளவும் இல்லை என்பது வருத்ததிற்குரியது


. மார்ச் 14ந்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா செய்தியாளார்களிடம் இறந்தவர்கள்மூலம் கொரோனா பரவுமா என்பதனை பற்றி கூறி இருந்தார். அதில் அவர் குறிப்பட்டத்தில் தும்மல், இருமல் போன்றவற்றால் தான் கொரோனா பரவும். இறந்தவர்களின் சடலத்தின் மூலம் கொரோனா பரவாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை எரியூட்டுவதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றார். இந்த செய்தி அறியாத மக்களின் செயல்கள் கொரோனாவை விட மிக மோசமாக உள்ளது. இது அண்ணா நகரில் மட்டும் நடந்த ஒரு சம்பவமாய் பார்க்க முடியவில்லை ஏற்கெனவே இதே போல் ஒர் சம்பவம் ஈரோடு நம்பியூரிலும் நடந்துள்ளது.


ஊரடங்கில் விழித்திரு, விலகி இரு, வீட்டிலிரு என்பதில் விழித்திருப்பது தான் நமது முதல் கடமை. விழிப்புணர்வுடன் நடந்து கொள்வோம் உயிர்களை காப்போம்.