டேங்கர் லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

திருப்பூர்,


    தாராபுரம் பழைய பிரமராயர் அக்ரஹார பகுதியைச் சேர்ந்த பாண்டிமுருகன் இவரது மகன் கோகுல்நாத் (22) படித்து முடித்துவிட்டு, வேலைக்கு செல்வதாக காத்திருந்தார்.


     


மேலும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இவரது பாட்டி வசித்துவருகிறார். பொங்கல் பண்டிகைக்காக இவர் கோகுல்நாத் வீட்டிற்கு வந்துள்ளார்.


பண்டிகையை முடித்து விட்டதால் ஊருக்கு செல்ல புறப்பட்டுள்ளார். கோகுல்நாத் தனது பாட்டியை மோட்டார் சைக்கிளில் பழனிக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு பிறகு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.


அப்போது தாராபுரம் புது அமராவதி ஆற்றுப்பாலம் அருகே வந்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த டேங்கர்லாரி மோதியதில் கோகுல்நாத் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதா பமாக உயிரிழந்தார்.


தகவலறிந்த தாராபுரம் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று கோகுல்நாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப் பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.