மார்ச் 8ந் தேதி 1987ம் ஆண்டு முதல் உலகமெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. பல பெண்களுக்கு மார்ச் 8ம் தேதி ஏன் மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகின்றது என்கின்ற விழிப்புணர்வு சிறிதளவும் இல்லாதது மிகுந்த வேதனைக்குறியது.
பல உழைக்கும் பெண் வர்கத்தின் உதிரத்தில் உதித்தது தான் மகளிர் தினம். 1789ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி பிரெஞ் சுப் புரட்சியின் போது சமுதாயத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வாழ வேண்டும் என்பதற்காக சமத்துவம், பிரநிதிநித்துவம் என்று கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால் அப்போது இருந்த ஆண் ஆதிக்க சமுகம் பெண்களின் கோரிக்கைக்கு சற்றும் செவி மடக்கவில்லை.
இதனால் உழைக்கும் பெண்கள் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பாரிஸ் நகரத் தெருக்களில் அணி அணியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனாலும் அரசு தன்னிலையில் இருந்து இரங்காமல் போராடிய பெண்களை குண்டுக்கட்டாக கைது செய்ய ஆணை பிறப்பித்தது. அஞ்சா நெஞ்சம் கொண்ட பெண்கள் சிறிதும் மனம் தவறாமல் போர் கோடியை வானளவு உயர்த்த துவங்கினர்.
பெண்களுக்கு பக்கபலமாக ஆண்களும் பெண்களுக்கான சம உரிமை மற்றும் வாக்குரிமையைக் கேட்டு ஆர்பாட்டங்களில் இறங்கினர். இதனை எதிர்பாராத அரசு கோரிக்கையை பரிசீலிப்பேன் என்று அறிவித்தது. ஆனால் அரசு மேல் நம்பிக்கை இல்லாததால் போராட்டத்தை தொடர்ந்தார்கள். போராட்ட சத்தம் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க், இத்தாலி, பிரான்ஸ் என்று உலகெங்கும் தொனிக்க தெடங்கியது. இதனால் அரசன் அதிர்ந்து போனார்.
1848ம் ஆண்டு மார்ச் 8ந் தேதி பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெற செய்யவும், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும், அரசன் ஒப்புதல் தந்தார்.
அந்த மார்ச் 8ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது. பிறகு பெண்களுக்கு தொழிற்சாலைகளில் பணிப்புரிய வாய்ப்பு கிடைத்தது. ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் 1907ம் ஆண்டு சம ஊதியம் வேண்டி பெண்கள் போராட்டம் செய்தனர். அதன் விளைவாக 1910ம் ஆண்டு பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது.
அதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை காட்டினர். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரா செர்கினே, மார்ச் மாதம் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஆனால், அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது. இதற்கிடையில், 1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார்.
அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக 197577ல் சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டு உலகமெங்கும் 1987ம் ஆண்டு மார்ச் 8ந் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாப்பட்டு வருகின்றது.
எளிதில் நாம் கொண்டாடும் மகளிர் தினத்திற்கு பின்னால் இத்தனை ரத்த சரித்திரம் இருக்க பெண்களை கொண்டாட ஒரு நாள் போதுமா !