பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாயாருக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை

   ஆந்திராவில் குடும்ப வறுமை காரணமாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். இதனால் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறுகிறது. எனவே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு தாயாருக்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் தாய்மடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது



   இந்த திட்டத்தை சித்தூரில் நடந்த விழாவில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.


   இந்த திட்டதின் மூலம் 42 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 82 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைய உள்ளனர். இதற்காக அரசு ரூ.6,456 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.


    மேலும் அடுத்த ஆண்டில் பள்ளி திறக்கப்படும் நாளில் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஸ்கூல் கிட் (3 செட் சீருடை, புத்தகம், காலணி, பெல்ட், புத்தக பை)  வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து அன்று-இன்று என்ற திட்டத்தில் 45 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் அமைத்து தரப்படும்.