வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போரட்டம் நடைபெற்றது.
மத்திய அரசை கண்டித்து ஏஐடியூசி, ஐஎன்டியூசி, சிஐடியூ, ஏ ஐயூடியூசி உள்ளிட்ட 11 மத்திய தொழிற்சங்களின் சார்பில் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம் நடைபெற்றது.
இந்நிலையில் வாணியம் பாடி, பேருந்து நிலையம் அருகில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஏஐடியூசி பொது செயலாளர் எஸ்.அன்வர், சிஐடியூசி தலைவர் இருதயநாதன், துணை செயலாளர் இந்துமதி, நகர மதிமுக செயலாளர் நாசீர்கான் மாவட்ட விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் முல்லை ஆகியோர் தலைமை மயில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் இந்திய குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை கட்டுபடுத்த வேண்டும். பொருளாதார நெருக்கடி யால் வேலை இழக்கும் தொழிலாளர்கள் வாழ்வா தரத்தை பாதுக்க வேண்டும். உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர். மறியலில் ஈடுப்பட்ட நிர்வாகிகளை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.