தேசிய குற்ற பதிவு ஆணையம் புள்ளி விவரங்களின் படி 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 152 முதியவர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இந்திய நாட்டில் தமிழகத்தில் தான் முதியவர்களுக்கு எதிரான அதிகபட்ச குற்றங்கள் நடந்துள்ளது. முதியோருக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது.
தமிழ்நாட்டை தொடர்ந்து மராட்டியம் (135), உத்தரபிரதேசம் (127) ஆகியவை உள்ளன.
2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் முதியவர்கள் மீது அதிக எண்ணிக்கையிலான கொலை முயற்சி வழக்குகளையும் தமிழ்நாடு பதிவு செய்துள்ளது. மேலும் முதியவர்களிடம் 182 கொள்ளை வழக்குகள் மற்றும் 16 மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் உள்ளன.