தேர்தல் குளறுபடி விவகாரம்: வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்

கடலூர்,


     கடலூர் ஊராட்சி ஒன்றிய அளவிலான உள்ளாட்சி தேர்தலில் குளறுபடியும் ஈடுபட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


   


     கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான முதல்கட்ட தேர்தல் டிசம்பர் 27ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2ம் தேதி கடலூர் அரசு கலைக் கல்லூரியில் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களுக்கு சரியான நேரத்திற்கு உணவு வழங்கப்படவில்லை. மேலும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்ததில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றன.


     அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையின் போது குமளங்குளம் ஊராட்சியில் தோல்வி அடைந்த சின்னத்தின் வேட்பாளரை வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இதனால் வெற்றி பெற்ற வேட்பாளர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவதோடு நீதிமன்றத்தையும் நாடி உள்ளார்.


      இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


       அதன்படி குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றி பெற்றவர் பெயரை மாற்றி அறிவித்ததில் பெரும் பங்கு வகிப்பதாக கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ஆட்சியர் செவ்வாய் கிழமை உத்தரவிட்டார். முன்னதாக வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டிருந்த