திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் தடை செய்யப்பட்ட 2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

திருப்பத்தூர், ஜன.8-


     திருப்பத்தூர் மாவட்டம், ரயில் நிலையத்தில் பான்ஸ்வாடி எஸ்.என் புரத்திலிருந்து எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்2 கோச் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்ததில் அரசு தடை செய்யப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள் இருந்துள்ளது.


     


   அதை திருப்பத்தூர் ரயில் நிலைய காவல் ஆய்வாளர் வடிவுகரசி பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருளை உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படை க்கப்பட்டது.