புதுடெல்லி ஜன. 7-
2012ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி ’நிர்பையா’ ஓடும் பேருந்தில் 6 பேர் சேர்ந்த கும்பலால் பாலியல் வண்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இவ்வழக்கின் குற்றவாளிகளை வரும் 22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் நிர்பையா வழக்கில் கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகளில் ஒருவன் 16 வயது சிறுவன் என்பதால் சீறார் நீதி சட்டப்படி அதிகப்பட்டசமாக 3 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொறு குற்றவாளியான ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான் .
இதனை தொடர்ந்து மற்ற 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை டில்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் ஆகியன உறுதி செய்தன. குற்றவாளிகள் தாக்கல் செய்த கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் குற்றவாளிகனை சிக்கிரமாக தூக்கில்யிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். எனவே வருகின்ற 22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.