கடந்த வருடம் இறுதியில் டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டுக் கட்டங்களாக நடைப்பெற்றது.
அதில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர், திருப்பத்தூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை மற்றம் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் விடுப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் நகர்புற உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் ஒன்றாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி ஜனவரி 27ல் அறிவிக்கப்படும் என்று கேட்டை மற்றும தமிழக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் பரபரப்பில் உள்ளது.