மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

 


புதுடெல்லி, ஜன.6-


       குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. வீடுகள் தோறும் சென்றுவருகிற ஏப்ரல் முதல் செப்டம்பருக்குள் கணக்கெடுப்பு நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் பொதுமக்களிடம் இருந்து உரிய விவரங்களை சேகரிப்பார்கள்.


                                             


ஆனால் அப்பணியில் ஈடுபடமாட்டோம் என மேற்கு வங்காளம், கேரளா மற்றும் காங்கிரஸ் " ஆளும் பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பெற்றோரின் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை எதிர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.


ஆனால் மக்கள் தொகை . பதிவேடு பணியில் மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் ஈடுபட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2003 ம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் மற்றும் குடியுரிமை சட்டத்தின் படி தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட வேண்டும்.


அவர்கள் வீடு தோறும் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு உதவ வேண்டும். அப்பணியில் ஈடுபட மறுக்கும் மாநில அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.1000 வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.