வேலூர், ஜன.8-
விஐடியில் வினையூ க்கிகளின் தற்கால வளர்ச் சிகள் குறித்த 3 நாள் சர்வ தேச கருத்தரங்கை நோபல் ராபர்ட் எச். கிரிப்ஸ் துவக்கி வைத்தார்.
அமெரிக்காவின் கலிபே பார்னியா தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியரும், 2005 ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் ராபர்ட் எச்.கிரிப்ஸ் விஐடியின், முன்னேற்றப்பட்ட அறிவியல் பள்ளி மற்றும் இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி ( வேதியியல் ) சார்பில் வினையூக்கிகளின் தற்கால வளர்ச்சிகள் குறித்த 3 நாள் சர்வதேச கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றியதாவது, நாம் அடிப்படை அறிவியலை நன்றாக புரிந்து வைத்து கொள்ள வேண்டும்.
அத்தகைய அறிவியலை பயனுள்ளதாகவும் முக்கிய மான பயன் பாட்டுக்கும் பயன்படுத்த வேண்டும். இந்த நூற்றாண்டில் ( 1st Decade ) வினையூக்கிகள் பிரிவில் பலருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
கருத்தரங்கு துவக்க விழாவில் விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தலைமையு ரையாற்றிய தாவது, இந்தியாவின் ஜனாதிபதி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடி ப்புகளுக்காக தனியார் பல்கலைக்கழ கங்கள் அளவில் விஐடிக்கு முதலிடம் மற்றும் விருதும் வழங்கியதை நினைவு கூர்ந்தார். எதிர் வரும் வருடங்களிலும் விஐடிக்கு தொடர்ந்து முதலிடம் கிடைக்கும் வகையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் என்றார்.
இந்தியாவில் 993 பல்கலைக்கழகங்கள் உள்ளது. அதில் விஐடி ஸ்கோபஸ் இண்டக்ஸ் ஜேர்னல் (Sco- pus Indexed Journal) கட்டுரை மற்றும் ஆராய்ச்சி கட்டுரை வெளியிடும் இதழ்லில் இந்தியளவில் விஐடி முதலிடம் வகிக்கிறது.
இந்த நிலை எதிர்வரும் காலங்களிலும் தொடரும் என்றார். அதே போல் விஐடி பேராசிரியர்கள் அதிகபடியான காப்புரி மைகளை பதிவு செய்ய பல்வேறு பிரிவுகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
விஐடி உதவி துணைத்தலைவர் காதம்பரி S. விசுவநாதன் பேசுகை யில், இந்தியாவில் ஆராய்ச்சி க்கான முக்கிய த்துவத்தை அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர் என்றார்.
இந்திய அரசு, நாட்டின் கல்வி முறையில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் வர தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்திய அறிவில் காங்கிரஸில் நாட்டின் பிரதமர் கூறுகையில் மாணவர்கள் அனைவரும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
பல்கடை கருத்தரங்கில் விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், இங்கிலாந்தின், சவுத் ஆம்டன் பல்கலைக்கழக பேராசிரியர் டொமினிக் டில்டெஸ்லி, அமெரிக்க பேராசிரியர் தாமஸ் கொலாகாட், விஐடி இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் கே.சத்திய நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விஐடியின், முன்னேற்றப்பட்ட அறிவியல் பள்ளி தலைவர் மேரி சாரல் கருத்தரங்கின் நோக்கத்தை விரிவாக எடுத்து கூறினார்.