கிறிஸ்துவ தேவாலயங்களை சீரமைக்க அரசு ரூ.3லட்சம் நிதி உதவி

 


    காஞ்சிபுரம்,


         காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்த்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17 ஆம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


       கிறிஸ்துவ தேவாலயங்கள் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள தேவாலயக் கட்டிடத்தின் வயதினை அடிப்படையாகக் கொண்டு ரு.3 இலட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.


      மேலும் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு கிறுஸ்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும் மற்றும் தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. முக்கியமாக தேவாலயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.


     இந்த தகுதிகளை கொண்ட தேவாலயம் www.bcmbcmw@tn.gov.in என்கின்ற இணையதள முகவரியில் விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்கலாம்.


    மேலும் சீரமைப்பு பணிக்காக நிதி உதவி வழங்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது