வேப்பூர்,
வேப்பூர் கூட்டுரோட்டில் நள்ளிரவில் பஸ், லாரி ஓட்டுனர்களுக்கு பிஸ்கட், டீ வழங்கி போலிசார் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டம், வேப்பூரில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையும், சேலம் கடலூர் நெடுஞ்சாலையும் இணைகின்றது. அதனால் இப்பகுதியில் வாகனங்கள் அதிவேகமாகவும், ஒரு சில ஓட்டுனர்கள் அஜாக்கிரதையாகவும் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளில் உயிர் இழப்பு ஏற்படுகிறது.
விபத்துக்களை தடுக்கும் பொருட்டு திட்டக்குடி டிஎஸ்பி, வெங்கடேசன் உத்திரவின்படி, வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா ஆலோசனையின் பேரில் எஸ்ஐ, பாக்கியராஜ், திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமிர்தா ஹோட்டல் அருகில் நள்ளிரவில் வந்த அனைத்து லாரி, பஸ், கார் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் டீ, பிஸ்கட் வழங்கி பாதுகாப்பாக செல்லவும் விபத்தில்லா தமிழ்நாடு உருவாக்கும் முயற்சியில் அனைவரும் பங்குபெற வேண்டும் எனவும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு உதவி அய்வாளர் கிருஷ்ணமர்க்கி மற்ற போலிசார் கலந்து கொண்டனர்.