குருப்- 4 தேர்வு முறைக்கேடு.....சிக்கிய 99 தேர்வர்கள்..இடைத்தரகர்களின் யுக்தி அம்பலம்...வட்டாட்சியர்கள் திக்குமுக்கு!

    கடந்தாண்டு செப்டம்பர் 1ம் தேதி நடைப்பெற்ற குருப்-4 தேர்வில் முறைக்கேடு நடைப்பெற்றத்தாக தேர்வர்கள் புகார் அளித்தனர்.



    புகாரின் அடிப்படையில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய முதல் 39 பேர் தரவரிசையில்  விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் தேர்வர்கள் சில மணி நேரத்தில் மறைந்துப் போக கூடிய எழுதுக் கோலால் தேர்வினை எழுதி உள்ளார்கள் என்பது தெரியவந்தது. மேலும், இடைதரகர்களின் உதவியால் தேர்வர்கள் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் முறைகேடாக தேர்வு எழுதியுள்ளார்கள் என்ற தகவல்கள் வெளியாகின. 


      இதனைக் குறித்து விசாரித்ததில் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த 52 பேர் உதவியுடன் 99 தேர்வர்கள் முறைகேடாக தேர்வு எழுதியுள்ளனர் மேலும் இந்த மோசடியில் வட்டாட்சியர்களுக்கும் பங்குள்ளது என்பது தெரியவந்தது.


      மேலும் குரூப் 4 முறைகேடு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.


    இந்நிலையில் தேர்வெழுதிய 99 பேரையும் 20B, 420, 469, 467, 466 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு உதவின ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 12 பேர் மீது  6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் தேர்வுக்கு ஓஎம்ஆர்(OMR) விடைத்தாள் தயாரிக்கும் ஒப்பந்ததாரர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.