இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி ஏவுகணையான கே-4 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
புதுடெல்லி,
இந்திய பாதுகாப்பு துறை ஆய்வு மற்றும் மேம்பாடு அமைப்பு உருவாக்கிய இரண்டாவது நீர்மூழ்கி ஏவுகணையான கே-4 ஏவுகணை நேற்று ஆந்திர மாநில கடற்பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இந்த ஏவுகணை நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை எடுத்து சென்று எதிரிகளை தாக்க பயன்படுத்தபடும்.இந்த ஏவுகணை சுமார் 3,500 கீ.மி வரை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
கே-4 ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலில், பல்வேறு சோதனைகளுக்கு பின்பு பொருத்தப்பட உள்ளது.