சென்னை , ஜன.7-
தமிழகத்தில் தற்போது மாநில அரசின் கட்டுப் பாட்டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 3350 எம்.பி.பி.எஸ். இடங் கள் இருக்கின்றன. இந நிலையில் திருப்பூர், ராமநாதபுரம், நீலகிரி, நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
அவற்றில் 6 கல்லூரிகளுக் கான பூர்வாங்க பணிகளுக்கு தலா ரூ.100 கோடியும், அதற்கான நிலத்தையும் தமிழக அரசு ஒதுக்கியது. அந்த கல்லூரிகளுக்கு முதல்வர்களும் நியமிக்கப் பட்டனர்.
இதில் திருவள்ளூர், நாகப் பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா ரூ.70 கோடி வீதம் மொத்தம் ரூ.210 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த தொகையைக் கொண்டு மருத்துவக் கல்லூரிக்கான பூர் வாங்கப் பணிகள் மேற் கொள்ளப்படும் என தக வல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அரியலூர், காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட் டங்களில் மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய தொழில்நுட்ப | மதிப்பீட்டுக்குழு முதல் கட்ட அனுமதியை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக் கப்பட்டதாக தெரிகி றது. ஓரிரு நாட்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச் சகத்தின் நிர்வாகம் குழுவின் பரிசீலனைக்கு இந்த விவகாரம் அனுப்பப்பட உள்ளது. அந்த குழு இறுதி அனுமதி அளிக்கும் பட்சத்தில் புதிய மருத் துவக் கல்லூரிகள் தொடங்கு வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரத்தில வெளியாகும் என மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.